Description
மாதங்களில் நான் மார்கழி, மலர்களிலே நான் மல்லிகை' என்றெல்லாம் கொண்டாடிய கிருஷ்ணன் மதனின் கேலிச்சித்திரங்களைப் பார்த்திருந்தால் 'கார்ட் டூன்களில் நான் மதன்' என்றும் கொண்டாடியிருப்பார். தேர்ந்த பத்திரிகை யாளரும் கூட. இன்றும் சக்கை போடு போடும் 'ஜூனியர் விகடன்' இதழ் இவருடைய ஜீனியஸ் மூளையில் உருவானதுதான். விஜய் டிவி, ஜெயா டிவி, புதுயுகம் ஆகிய ஒளியலை வரிசைகளில் (channel) நியாயமான திரை விமர்சகராகக் கொடி நாட்டியவர். முகலாய வரலாற்றைப் படு சுவாரசி யமாகப் பதிவு செய்த இவரது 'வந்தார்கள், வென்றார்கள்' நூல் ஒன்றரை லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை புரிந்திருக்கிறது. எதைப் பற்றி எழுதினாலும், ஊடு பாவாக நகைச்சுவை கலந்து பின்னுவது இவருக்கே உரித்தான தனிக் கலை! உலக வரலாற்றில் விசுவரூபம் எடுத்த மாவீரர்களும், ளும், விஞ்ஞானிகளும், கலைஞர்களும் ஏராளமாக உண்டு. அவர்களில் எத்தனை பேர் 'ஜீனியஸ்'களாக அறியப்படுகிறார்கள்? திறமையின் அடுத்தகட்டம்தான் ஜீனியஸ்! அந்த உச்சக்கட்ட எல்லைகளையும் மீறியவர்கள் அவர்கள். ஆகவே, ஜீனியஸ் என்பது வலி மிகுந்த விஷயம்! சாதாரணமாகவே ஜீனியஸுக்கும். கிறுக்குத்தனத்துக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. 'ஜீனியஸ்'களில் பெரிய சதவிகித்தினர் சற்று மனம் பேதலித்தவர்களாக, வெறி பிடித்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்! ஆனால் ஒன்று! இந்த 'வெறி' பிடித்த மனிதர்கள் கண்டுபிடித்த விஷயங்கள்தான் இன்று உலகையே இயக்குகிறது! இன்று நாம் சர்வசாதாரணமாகப் பயன் படுத்துகிற மின்சாரத்திலிருந்து விண்வெளிக்கலன் வரை அநேகமாக எல்லா 'உபகரணங்களும்' இந்த 'கிறுக்குகள்' கண்டு பிடித்தவைதான்! வரலாற்றில் இடம் பெற்ற சில ஜீனியஸ்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரசியமான பக்கங்களையே நாம் இந்த நூலில் அலசப் போகிறோம்.