Description
சர்வாதிகாரம். பஞ்சம். பட்டினிச் சாவு. மிரட்டல். கடத்தல். அரசியல் கொலைகள். அணு ஆயுதங்கள். ஏவுகணைகள். பேரழிவு. இவற்றைத் தவிர
வட கொரியாவில் ஒன்றுமில்லை. வதந்திகள், ஊகங்கள், கிசுகிசுக்களை
முற்றிலும் விலக்கி, வட கொரியாவின்
அத்தனைக் குற்றச் செயல்பாடுகளின் பின்னணியையும் ஆதாரபூர்வமாக
ஆராய்கிறது இந்நூல்.
கிம் ஜாங் உன் என்கிற மனிதர் எப்படி உருவானார்? அவரது தாத்தாவும் தந்தையும் வகுத்த சர்வாதிகாரப் பாதையைஎவ்வாறு அவர் நவீனமாக்கினார்?
எப்படி அவரால் அமெரிக்காவின் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டிவைக்க முடிகிறது? சோற்றுக்கே வழியில்லாத ஒரு நாடு
எப்படி அணு ஆயுதங்கள் தயாரிக்கிறது? ஏவுகணைகளைச் செலுத்துகிறது?
இது ஒரு மர்ம தேசத்தின் சோக வரலாறல்ல. எழுபத்தாறு ஆண்டுகளில் ஒரு நிலமே இறுகி வெடி குண்டாக உருமாறியிருக்கும்
அபாயத்தின் சரித்திரம்.