Description
இந்தியாவை உருவாக்கிய ஆளுமைகள் எவர் என்று கேட்டால் பல பெயர்கள் எழுந்து வரும். அவற்றில் முதன்மையானது ஆதி சங்கரர் பெயர். இந்துமதம் என நாம் இன்று சொல்லும் அமைப்பை உருவாக்கியவர் அவர். இந்தியாவின் தொன்மையான வேதஞானத்தை தத்துவமாக உருமாற்றியவர்.. அவரது தொடர்ச்சியே பின்னர் உருவான தத்துவ இயக்கங்கள் அனைத்தும். நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள் முதன்மையாக சங்கரரின் மரபில் வந்த ராமகிருஷ்ண இயக்கத்தினர்தான். சங்கரர் இன்றி இந்தியா இல்லை. சங்கரரை அறியாமல் இந்தியாவை அறிய முடியாது. இந்நூல் சங்கரரை அறிவதற்கான ஒரு தொடக்க நூல் ஜெயமோகன் ஆற்றிய ஓர் உரையின் எழுத்து வடிவம் ஆகவே எளிய வாசிப்புக்கு உரியது.

