Description
படுகளம் ஒரு வேகப்புனைவு (திரில்லர்) வகை நாவல். இத்தகைய கதைகள் பொழுதுபோக்கு எழுத்தின் ஒரு வடிவமாக இருந்தன, இன்று உலகமெங்கும் இலக்கியப்படைப்புக்கான வடிவமாகவும் ஆகியுள்ளன. இவை ஒரு வாழ்க்கை யதார்த்தத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை தீவிரப்படுத்திச் சொல்லும் அமைப்பு கொண்டவை. ஆகவே சற்று யதார்த்தம் மீறியவை. அந்த அடிப்படை அமைப்புக்குள் கதைமாந்தரின் உள்ளம் வெளிப்படும் விதம், வாழ்க்கையின் சில அரிய தருணங்கள் வழியாக அவை இலக்கியத்தகுதியையும் அடைகின்றன.
படுகளம் மிக வேகமாக நகரும் நிகழ்வுகள் வழியாக, சலிப்பற்ற ஒரு வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. அதன் வழியாக ஒரு வாழ்க்கைக் களமும் அங்கு வாழும் மனிதர்களின் அகமாற்றங்களும் சித்தரிக்கப்படுகின்றன