Description
தினமலர்' நாளிதழில் வெளியான எழுத்தாளர் திரு.ஜெயமோகனின் 'ஜனநாயகச் சோதனைச்சாலையில்' கட்டுரைத்தொகுப்பு, புத்தக வடிவில் வருவது வரவேற்கத்தக்கது. அவரது தேசப்பற்றும், ஜனநாயக நேசமும், சென்ற, அறுபத்தைந்து ஆண்டுகளில் மக்கள் அடைந்த பயனும், அதைவிட வெகுஜன நன்மைக்காக உருவெடுக்கும் சிலரின் நன்மைக்காக ஜனநாயக அமைப்பு மாறியது குறித்த அவரது எண்ணமும் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. எவ்விதம் இந்த அமைப்பு மாறக்கூடும், மாற்றப்பட வேண்டும் என்பதில் அவரின் ஆழ்ந்த சிந்தனையும், உயர்ந்த நோக்கமும் வெளிப்படுகிறது. இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள், நம் ஜனநாயக நிலை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தக்கூடிய ஊக்கியாக செயல்படும் என்பதில் ஐயமில்லை. அதுவும் இளைய தலைமுறையினரிடம் மாற்றத்தை ஏற்படுத்தி, நம் எதிர்கால நன்மைக்கான வித்தாகவும் இந்நூல் அமையும்.
- நீ. கோபால்சாமி முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்