Description
ஜெயமோகன் தமிழ் இலக்கிய முன்னோடிகள் பற்றி எழுதிய கட்டுரைகள் ஏழுநூல்களாக வெளிவந்தன. பின்னர் முழுநூலாகவும் அவை வெளிவந்தன. அவற்றில் இரண்டாவது நூல் இது.
இந்நூலில் மௌனி, ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் மற்றும் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் ஆகியோர் பற்றிய முழுமையான பார்வையை உருவாக்க முயன்றிருக்கிறார் ஜெயமோகன். அவர்களின் எழுத்தின் அமைப்பு, அழகியல் மற்றும் பின்னணி ஆகியவற்றை ஆராய்கிறார். நவீனத்தமிழிலக்கியத்தின் அடிப்படைகளை புரிந்துகொள்ள உதவும் நூல் இது.
இலக்கிய விமர்சனம் என்பதும் ஓர் இலக்கியவகைமையே, இலக்கியப்படைப்புக்குரிய சுவாரசியமான வாசிப்பும் வாசகனின் கற்பனையையும் சிந்தனையையும் தூண்டும் மொழி நடையும் அதற்கும் தேவை என்றும் காட்டும் கட்டுரைகள் இவை.
ஜெயமோகன்

