Description
இந்நாவல் ஒரு தனிமனிதனின் ஆத்மாவில் தெய்வமும் சாத்தானும் நிகழ்த்தும் மாபெரும் போராட்டத்தின் கதை. இது உச்சநிலையில் இருந்து உச்சநிலை நோக்கிச் செல்லும் படைப்பு. அதன்பொருட்டு சாமானியதளங்களை, அன்றாடங்களை தவிர்த்துவிட்டிருக்கிறது. ஆகவே யதார்த்தத்தை கடந்து நீள்கிறது. மானுட ஆத்மா கொள்ளும் வலிகளின் பரவசங்களின் தீவிரநிலைகள் மட்டுமே இதிலுள்ளன. அவ்வகையில் இந்நாவல் காவியத்தன்மை கொண்டது எனலாம். இன்னும் பொருத்தமாக இசைநாடகத்தன்மை கொண்டது எனலாம்.
மணி ரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் முன்வடிவமாக எழுதப்பட்டது இந்நாவலின் முழு வடிவம். இப்போதுதான் நூல்வடிவாக வெளிவருகிறது.