விருதுநகர்-வணிகத்தால் வளமை பெற்ற வறள்பூமி


Author: மா.மோகன்

Pages:

Year: 2023

Price:
Sale priceRs. 200.00

Description

வணிகத்தால் சுயம்புவாக வளமை பெற்ற ஒரு வறண்ட நகரத்தின் வரலாறு இது. பிற நகரங்களில் வழக்கத்தில் இல்லாத பேட்டை, கிட்டங்கி, மகமை, உறவின் முறை, வீடு என்ற வகையறாக்கள், பிடியரிசித் திட்டம் என பற்பல புதுமைச் செயல்பாடுகள் பூத்த பூமி. தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தை “கோவில் நகரம்” என்று அழைப்பது போல விருதுநகரை “கல்வி நகரம்” என அழைக்கலாம். அரசியலில் நிகரற்ற ஆளுமைகளை ஈந்து அகிலம் முழுதும் புகழ் பெற்று விளங்கும் களம். சுயமரியாதை திருமணம், விதவைத் திருமணம் ஆகிய புரட்சிகர செயல்பாடுகளில் முன்னணி வகித்த நகரம். விருதுநகர் என்ற பெயர் சூட்டப்பட்டு நூறு ஆண்டுகள் முடிவுறும் இவ்வாண்டில் நகரங்களின் கதை வரிசையில் ‘விருதுநகர்’ வெளிவருதல் மகிழ்ச்சிக்குரியது. கோமகனுக்கு விருதுநகர் விருதளிக்கும்.

You may also like

Recently viewed