Description
சிறை ஏகும் முன்பு வ.உ.சி. விட்டுச் சென்ற விடுதலைக் கனலை ஏந்தி வளர்த்தவர் தூத்துக்குடி ரொட்ரீக்ஸ். வெடிகுண்டு தயாரித்த தீவிரவாதி என்று அவரை, ஆங்கிலேய அரசின் ஆவணம் சொல்கிறது. அவரது மகன்தான் எம்.ஜி.யாருக்கு இணையாகச் சம்பளம் வாங்கிய நடிகர் சந்திரபாபு. நாட்டுக்காக நகை பொருள் வீடு எல்லாம் இழந்து தியாகிகளுக்கான சலுகைகளையும் ஏற்க மறுத்தவர் தூத்துக்குடி எம்.சி. வீரபாகுபிள்ளை. ‘சட்டிக் கொட்டு தொண்ட’ராகயிருந்து தூத்துக்குடி சட்டசபை உறுப்பினராகி மக்கள் பணி ஆற்றுகையில் நடுரோட்டில் உயிர் நீத்தவர் சாமுவேல் நாடார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. வாழ்ந்த தூத்துக்குடி ஆளுமைப் பட்டியலின் நீட்சிக்கு எல்லை இல்லை. இவர்களோடு சூலமங்கலம் ராஜலட்சுமியின் பாடல்களோடு மட்டும் வாழ்ந்த சீதையக்காவும் தாழம்பூ வைத்துப் பின்னிய சடையை வளவில் ஒவ்வொரு வீடாகப் போய்க் காண்பித்துவரும் சிறுமியும் கூட இந்த நூலில் வந்து போகிறார்கள். தூத்துக்குடிக்கு திருமந்திர நகரம் என்றொரு பெயர் உண்டு. இதன் வரலாறும் நம்மை வசியம் செய்கிறது.