Description
எங்க ஆச்சி ரொம்ப சிக்கனம் சில தடவை வெள்ளென எழுந்து நடந்தே கூட ஆத்தூருக்குப் போய் இருக்கிறாராம். ஆனால் நான் வங்கிப் பணிக்காகவோ தொழிற்சங்கப் பணிக்காகவோ புன்னைக்காயல், ஆத்தூர், ஆறுமுகனேரி, ஏரல் என்று சுற்றிச் சுற்றி வந்த போது சொந்த ஊர் பாலத்தைக் கடக்கும் போது ஏக்கத்தோடு எட்டிப் பார்த்ததோடு சரி ஆனால் வெற்றிலையை பார்க்கும் போதெல்லாம் ஆத்தூர் ஞாபகம் வந்து விடுவதைத் தடுக்க முடியவில்லை" ஆத்தூர் மட்டுமல்ல ஆறுமுகமங்கலம், பெருங்குளம், காயல்பட்டினம், ஆழ்வார் திருநகரி என்று ஊர் ஊராய் அழைத்துச் செல்கிறது இந்நூல். பரத வர்ம பாண்டியன், அ.மாதவையா, ஆதித்தனார், பெஞ்சமின், சோமயாஜுலு, நாயகம், சற்குணர், தேங்காய் சீனிவாசன், வலேரியன் பர்னாந்து, எஸ்.டி.சுப்புலெட்சுமி, என்று திருச்செந்தூர்ப் பகுதியில் பிறந்த, வாழ்ந்த பேராளுமைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைப்பதோடு அடித்தட்டு மக்களின் பல நூற்றாண்டு வாழ்க்கைத் தடங்களையும், அவர்கள் முத்துக் குளித்ததையும், கும்பல் கும்பலாக அடிமைகளாக விற்கப்பட்ட வரலாற்றையும் எடுத்துரைக்கிறது. இந்நூலில் சொல்லியிருப்பவை கூடக் கொஞ்சம் தான். ஆனால் எவ்வளவு எழுதினாலும் தீராது அலைவாய் நிகழ்வுகளும் நினைவுகளும்