கனவு நகரம் காஞ்சிபுரம்


Author: அக்களூர் ரவி

Pages: 280

Year: 2023

Price:
Sale priceRs. 330.00

Description

வேகவதி, பாலாறு, செய்யாறு - இது நதிகளின் சங்கமம்; பழைய சீவரம், தண்டு சீவரம், காஞ்சீவரம் - இது  இடங்களின் சங்கமம், சமயம்,  வரலாறு, அரசியல், பண்பாடு, மொழி, கலை, இலக்கியம், பட்டு, ஆன்மீகம்,  தேசியம், பொதுமை, பகுத்தறிவு, அறிஞர்கள், ஆளுமைகள் என்று பன்முகச் சங்கமம் காஞ்சி. திராவிட பண்பாட்டைக் கடலுக்கும் அப்பால் கொண்டு சென்ற நகரம் காஞ்சி. தமிழ்ப் பணிந்து பைந்நாகப் பாய்ச்சுருட்டிய  இறைவன்- தமிழ்க் கேட்க உயிர்தந்த நந்திவர்மன்; தமிழக அரசியல் வரலாற்றின் திருப்புமுனை மாநாடு, பெரும் தமிழ்க்கனவை நனவாக்கிய அண்ணா -- காஞ்சித் திரையின் அழியாத சித்திரங்கள். இதன் நூற்றாண்டுகளின்  இயக்கம் - அல்லும் பகலும் இயங்கும் தறிகளில்,  அப்பளத் தொழிலில்,  அரிசி ஆலைகளில்,  நகரைச் சூழ்ந்து தினமும் பெருகும்  நவீனத் தொழில் முனைவுகளில்  இன்றும் தொடர்கிறது.  அம்மக்களின் கலையில், இசையில், உழைப்பில், கொண்டிருக்கும் நம்பிக்கையில் இந்தக் கனவு நகரம் உயிர்த்திருக்கிதது.

You may also like

Recently viewed