Description
சாதி, மதம், மொழி, நாடு போன்ற பிரிவினைகள் அனைத்-தையும் கடந்து ஒரு பெரும் மக்கள் கூட்டத்துக்கு உந்துசக்தியாகத் திகழ்கிறார் சுவாமி விவேகானந்தர். இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் பலர் விவேகானந்தரின் சிந்தனைகளால் தொடர்ந்து ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.விவேகானந்தரின் வாக்கு மட்டுமல்ல அவர் வாழ்வும்கூடஅசாதாரணமானது. மேற்கத்திய நவீன சிந்தனைகளுக்கும் கிழக்கத்திய ஆன்மிகச் சிந்தனைகளுக்கும் பாலமாக விளங்கியவர்.சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் பிளவுண்டிருக்கும் இந்தியச் சமூகமும் மேற்கத்திய தாக்கத்தின் மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் இந்திய இளைஞர்களும் விவேகானந்தரை உள்வாங்கிக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். இந்தப் புத்தகம் விவேகானந்தரின் வாழ்வைப் பற்றிய ஓர் அடிப்படைப் புரிதலை அளிப்பதோடு அவருடைய பணிகளையும் சிந்தனைகளையும்கூட சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது.