Description
பெரும் பேரரசுகளையும், பெரும் மன்னர்களையும் கதை மாந்தர்களாகக்கொண்டு படைக்கப்பெற்று வரும் புதினங்களுக்கு மத்தியில், வெண்ணாகரம் என்ற குறுநிலப் பகுதியினை ஆட்சி செய்த சோழன் செம்பியன் திருமேனியை நாயகனாக்கி அவனைச் சுற்றியே கதையைப் புன்னைந்து, கி.பி.10ஆம் நூற்றாண்டு காலகட்டத்துக்கே நம்மையெல்லாம் அழைத்துச் சென்றுள்ளார். இந்நாவலை எழுதுவதற்காகவே கதைக் களங்களான வெண்ணாற்றங்கரை, புன்னையூர் ஏரி, திருவையாறு, திருவெள்ளறை மற்றும் திருமானூர், திருமழபாடி, தலைவாசல், கல்வராயன்மலை போன்ற பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து எழுதி, இப்புதினத்தை உண்மை வரலாறு போலவே படிப்போரை மலைக்க வைத்துவிட்டார் நூலாசிரியர், முனைவர் மணி மாறன் தஞ்சை சரசுவதி மகால் நூலகம் & நிறுவனத் தலைவர் ஏடகம்.