ISIS: கொலைகாரன்பேட்டை


Author: பா.ராகவன்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 190.00

Description

அல் காயிதாவுக்குப் பிறகு சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது, ஐ.எஸ் என்கிற ஐண்டூச்ட்டிஞி குtச்tஞு தீவிரவாத அமைப்பின் தோற்றமும் செயல்பாடுகளும். எந்தவித சித்தாந்தப் பின்னணியும் பெரிதாக இல்லாத இந்த இயக்கம், மத்தியக் கிழக்கில், குறிப்பாக இராக்கிலும் சிரியாவிலும் அப்பாவி மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்து வருகிறது. இராக்கில் மட்டுமே ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்களின் கோர மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறது. எண்ணிலடங்கா அப்பாவிப் பொதுமக்கள் சொந்த மண்ணில் வாழ வழியின்றி சிரியாவைவிட்டு இன்று இடம் பெயர்ந்துகொண்டிருப்பதில் ஐ.எஸ்ஸின் பங்கு பெரிது. சிரியா உள்நாட்டு யுத்தத்தில் ஐஎஸ் ஒரு மிக முக்கியக் கண்ணி.சுமார் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள். கோடி கோடியாகக் கொட்டும் பணம். உலகு தழுவிய நெட் ஒர்க் பலம். சந்தேகமின்றி ஐ.எஸ். இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல்.ஐ.எஸ். அமைப்பின் இந்த திகிலூட்டும் வளர்ச்சி மற்றும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ள மத்தியக் கிழக்கு தேசங்களின் ஜாதி அரசியல் மற்றும் எண்ணெய் அரசியலின் வேர்வரை வெளியே இழுத்து விளக்குகிறார் பாரா.சர்வதேசத் தீவிரவாத இயக்கங்களைப் பற்றித் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டும் எழுதியும் வரும் ஆசிரியரின் இந்நூல், ஐ.எஸ்ஸின் கோர முகத்தை முழுமையாகத் தோலுரித்துக் காட்டுகிறது.

You may also like

Recently viewed