Description
மகாபாரதப் பெரும்போரின் முதல்பத்துநாட்களின் கதைமுதல்வர் பீஷ்மர். தனியொருவராக நின்று அக்களத்தை நடத்தியவர். அந்த பத்துநாட்களின் கதை இந்நாவல். பீஷ்மரே இந்நாவலின் மையம் என்றாலும் குருக்ஷேத்திரப் போரின் பேரோவியம் இந்நாவலிலேயே விரியத் தொடங்குகிறது.
மாபெரும் நாடகத்தருணங்களால் ஆனது போர்க்களம். மானுட விழுமியங்கள் அனைத்தையும் உச்சத்தில் நிறுத்திப் பேசுவதற்குரியது. இந்நாவலிலும் போர்க்களம் அவ்வாறே எழுதப்பட்டுள்ளது. உணர்வெழுச்சிகளின், உளநிலைகளின் காட்சி. உளப்பெயர்வுகளின் கனவுகளின் காட்சி. உச்சங்கள் உச்சங்களால் நிகர்செய்யப்படும் ஒரு வெளி.
திசைதேர் வெள்ளம் – வெண்முரசு நாவல் வரிசையில் பத்தொனொன்பது நாவல்.
840 பக்கங்கள் கொண்ட நாவல் இது. வண்ணப் புகைப்படங்கள் இந்நாவலில் கிடையாது.